நிவின்பாலி படத்தில் நடிகராக அறிமுகமாகும் விஷாலின் தந்தை..!

224

Gk-reddy

திரையுலகில் இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவது வழக்கமாக நடக்கு விஷயம் தான். ஆனால் பிரபல தயாரிப்பாளர்கள் கூட நடிகராக அவதாரம் எடுப்பதும் அவ்வபோது நடக்கத்தான் செய்கிறது.. தங்கள் கதைக்கு தேவைப்படும் கேரக்டருக்கு இவர் செட்டாவார் என இயக்குனர்களே தேடிச்சென்று சில தயாரிப்பாளர்களை நடிகர்களாக உருமாற்றி விடுகிறார்கள்.

இன்று குணச்சித்திர நடிகராக பிஸியாக வலம் வரும் ஜெயபிரகாஷ் தயாரிப்பாளராக இருந்தவர் தானே.. ஏ.எல்.அழகப்பன், பட்டியல் சேகர், போஸ்டர் நந்தகுமார் எல்லாம் இப்படி நடிகராக மாறியவர்கள் தான். அந்தவகையில் நடிகராக அவதாரம் எடுத்து இருக்கிறார் விஷாலின் தந்தையான பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி.

ஆம். அறிமுக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து தமிழில் இயக்கிவரும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஜி.கே.ரெட்டி. ஒரு விழாவில் கலந்துகொண்ட ஜி.கே.ரெட்டியின் புகைப்படத்தை பார்த்த இயக்குனர், தனது படத்தில் உள்ள ஒரு முக்கிய கேரக்டருக்கு இவர் கச்சிதமாக பொருந்துவார் என நினைத்து ஜி.கே.ரெட்டியை அணுகியிருக்கிறார்.

முதலில் தயங்கிய ஜி.கே.ரெட்டியை சமாதானப்படுத்தி, அவருக்கு பலமுறை ரிகர்ஷல் கொடுத்து ஷூட்டிங்ஸ்பாட்டில் அவரை எந்தவித பதட்டமும் இன்றி நடிக்கவைத்தாராம் கௌதம் ராமச்சந்திரன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு என்கிற பகுதியை சுற்றி நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் ‘கள்ளபடம்’ லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக ‘சதுரங்க வேட்டை’ புகழ் நட்டி நடிக்கிறார்.

Comments are closed.