
கடந்த 36 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு அவர்களது கல்வியை தொடரும் வகையில் தொடர்ந்து நற்பணிகள் செய்து வருகிறது ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை. அதுமட்டுமல்ல,ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசளித்து ஊக்கப்படுத்தி வருகிறது கடந்த 30 ஆண்டுகளாக சிவகுமார் பொறுப்பில் வழங்கப்பட்ட இந்த ஊக்கப்படுத்தும் முயற்சியில் 2006ல் இருந்து சூர்யாவின் அகரம் பவுண்டேஷனும் இணைந்து கொண்டது.
இந்த வருடம் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியானதை ஓட்டி, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 37-ஆம் ஆண்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் பரிசளிக்கப்பட்டது. இதில் சிவகுமார், சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.. இந்த விழாவில் சிவகுமார் உருக்கமாக பேசியதாவது ;
“கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கை தரத்தை எந்த அளவு உயர்த்தும் என்பதனையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்று பேசினார் சிவகுமார்.
Comments are closed.