ஹிப் ஹாப் ஆதி எடுத்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா…?

260

hip hop aadhi

யாரையும் குறைசொல்ல முடியாது.. காரணம் அவரவர் ஆசை அவரவர்க்கு.. அதனால் தான் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கும் அரிதாரம் பூச ஆசைவந்துவிட்டது..இதற்கு தூபம் போட்டது விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷின் வெற்றிகரமான உருமாற்றம் என்பதை சொல்லவும் வேண்டுமோ..? ஆனால் நடிப்பு, இசை என்றில்லாமல் கதை, வசனம், டைரக்சன் என அவர் இறங்கியிருப்பதுதான் ஆச்சர்யத்துடன் கவலையையும் கொடுக்கிறது..

காரணம் ஓர் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி நன்றாக வளர்ந்து வரும் நிலையில் தனது கேரியரை ஸ்திரப்படுத்திக்கொள்ளாமல் இப்படி பல துறைகளில் கால் வைப்பது சரியா என காலம் தான் பதில் சொல்லவேண்டும்.. அதுசரி.. அவர் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா..? ‘முறுக்கு மீசை’. படத்தை தயாரிப்பது ஹிப்ஹாப் தமிழாவின் காட்பாதரான சுந்தர்.சி தான்..

Comments are closed.