
கடந்த மூன்று படங்களாக புதுமுகங்களை வைத்து படங்களை இயக்கிவந்த, பிரபு சாலமன் இந்தமுறை அந்த ரூட்டில் இருந்து மாறி, தனுஷை ஹீரோவாக வைத்து ‘தொடரி’ படத்தை இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசை வேறு யாராக இருக்க முடியும்..? சாட்சாத் பிரபு சாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளரான டி.இமான் தான்.
ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தனுஷ் படத்தில் நடிக்க ஆரம்பத்தில் தான் தயங்கிய விஷயத்தை குறிப்பிட்டார். அதாவது பிரபுசாலமன் படம் முழுதும் ரயிலிலேயே படமாக்கவேண்டும் என்று சொன்னதும் தனக்கு உயரம் என்றாலே பயம் என்பதை குறிப்பிட்டு தயங்கினாராம். ஆனால் அவரை தைரியப்படுத்தும் விதமாக ஆரம்பத்தில் தானே ஏறி ரயிலின் மீது ஏறி காட்சிகளை படமாக்கும்போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை விளக்கினாராம் பிரபு சாலமன். அதன்பின் தான் தனுஷ் தைரியமாக நடித்தாராம்
அதுமட்டுமல்ல, தனுஷிடம் கதைசொல்ல பிரபு சாலமன் சென்றபோது, கதையை கேட்கமால், டைரக்ட்டாக உங்களுக்கு என்ன தேதிகள் வேண்டும் தருகிறேன் என்றாராம் தனுஷ்… அதன்பின் படப்பிடிப்பு ஆரம்பித்த நான்கு நாட்கள் கழித்து தான் கதையை கேட்கவே செய்தாராம் தனுஷ்.
Comments are closed.