
விசாரணை படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து ‘வடசென்னை’ படத்தை துவங்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் வெற்றிமாறன். சென்னையை பொறுத்தவரை இருப்பதிலேயே ஷூட்டிங் நடத்துவதற்கு கஷ்டமான பகுதி என்றால் அது வடசென்னை பகுதிதான்.
அதனால் தன்னுடைய படப்பிடிப்பை சிரமமின்றி நடத்தவும், படம் பற்றிய விஷயங்கள் வெளியே கசியாமல் இருக்கவும் பின்னி மில்லில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வடசென்னையின் முக்கிய பகுதிகளை போல செட் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தமாத இறுதியில் படப்பிடிப்பை துவக்க இருக்கிறார் வெற்றிமாறன்.
Comments are closed.