3 கேரக்டர்.. 5 கெட்டப்.. அசத்தும் சூர்யா..!

256

2424
Suriya
நாளை (மே-6) சூர்யா நடித்துள்ள ‘24’ படம் வெளியாகவுள்ளது. விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கூட்டணி என மாஸ் படமாக இது உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல சயன்ஸ் பிக்சன் படமாக இது உருவாகியுள்ளதும் டைம் மெஷினை மையப்படுத்தி கதை பின்னப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.

படத்தில் சூர்யா மூன்று விதமான கேரக்டர்களில் நடிக்கிறார் என்று சொலப்பட்டு வந்தது. இந்நிலையில் இதை உறுதிப்படுத்தியுள்ள இயக்குனர் விக்ரம் கே.குமார் மூன்று விதமான கேரக்டர்களில் ஐந்து வகையான கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளார்.. சூர்யாவின் ஒவ்வொரு கெட்டப்பும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.