ஜீரோ – விமர்சனம்

320

zero-tamil-movie

பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் எதை விரும்புவார்கள் என்கிற எண்ணத்தில் எடுக்கப்படுகின்றன.. இன்னும் சிலர் ரசிகர்கள் இதைத்தா விரும்புவார்கள் என எடுத்து வைப்பார்கள்.. ஆனால் ரசிகர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, புரியுமோ புரியாதோ அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் புதிய முயற்சி என தங்களுக்கு தோன்றியதை படமாக எடுப்பார்கள்,, இந்த ‘ஜீரோ’ படம் மூன்றாவது ரகம்.

சமூக சேவகர் அஸ்வின்.. அவரது காதல் மனைவி ஷிவதா. இருவரும் தனிகுடித்தனம் நடத்தும் நிலையில் ஷிவதாவிற்கு சில வினோத பழக்கங்களும், அவ்வப்போது அவரது நடவடிக்கைகளில் ஒரு மன நோயாளியின் அறிகுறி தெரிவதியும் அஸ்வின் கவனிக்கிறார்.

தனக்கு தெரிந்த டாக்டர் ஷர்மிளா மூலம் இதை உறுதிப்படுத்தும் அஸ்வின், இதிலிருந்து ஷிவதாவை விடுவிக்க, ஆத்மாக்களுடன் பேசும் சக்கரவர்த்தியை நாடுகிறார். அப்போது தான் ஷிவதா சாத்தானின் ஆக்கிரமிப்பில் இருப்பதி கண்டுபிடிக்கின்றனர். அதன்பின் என்ன நடக்கின்றது என்பது மீதிக்கதை.

புதுமையான முயற்சி என்றாலும் சாதாரண ரசிகர்கள் புரிந்துகொள்ள தடுமாறும் கதை.. விதவிதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் கேரக்டர் என்பதால் ஷிவதாவுக்கு கடுமையான வேலை.. ஆனால் சரியாக செய்திருக்கிறார். அஸ்வினும் பாந்தமான, சாந்தமான கணவனாக நடித்துள்ளார்.

ஜே.டி.சக்கரவர்த்தி அலட்டல் இல்லாத நடிப்பை தர, அஸ்வினின் தந்தையாக வரும் ரவி ராகவேந்திரா யதார்த்த பாசத்தந்தையை கண்முன்னே நிறுத்துகிறார். நிவாஸ் பிரசன்னாவின் இசை திகில் சேர்க்கிறேன் என காதலி கிழிகிறது. பாபுகுமாரின் ஒளிப்பதிவு புதிய உலகம் ஒன்றை சித்தரிக்க முயற்சிக்கிறது. புதியவரான ஷிவ் மோஹா, பேய்க்கதைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆனால் அதற்கு ஈக்குவலான சாத்தான் கதையை கையில் எடுத்துள்ளது வித்தியாசமான அதேசமயம் ரிஸ்க்கான முயற்சிதான். குழப்பமான கதையும், அதை ரசிகர்களுக்கு புரியும் வகையில் காட்சிப்படுத்தாதது மட்டுமே படத்திற்கு மைனஸ் என்று சொல்லலாம்.

Comments are closed.