
சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன்’ படம் படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இயக்குனர் சசி தான் மிகச்சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.. இது தனக்கு சசி கொடுத்துள்ள இரண்டாவது லைப்டைம் சான்ஸ் என விஜய் ஆண்டனியே படத்தின் சக்சஸ் மீட்டில் கூறியுள்ளார்.. உண்மைதான்..
விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகம் ஆக வழி தேடிக்கொண்டிருந்தபோது அவரை தனது ‘டிஷ்யூம்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சசி.. இப்போது விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், அவருக்கும் தனி மார்க்கெட், ஒப்பனிங் என ஏற்படுத்திக்கொடுத்து அவரது வேல்யூவையே உயர்த்திவிட்டார் சசி.
Comments are closed.