
சமீபத்தில் வெளியான ‘போக்கிரி ராஜா படத்தில் நடித்த நடிகர்களில் யாருக்கு லாபமோ இல்லையோ, கூலிங்கிளாஸ் குணாவாக நடித்த சிபிராஜ் வரும் காட்சிகளில் எல்லாம் அவருக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது.. அந்த வரவேற்பு தந்த மகிழ்ச்சியில் சூட்டோடு சூடாக சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு புதிய படத்திற்கு பூஜையும் நேற்று போடப்பட்டுவிட்டது.
இந்த புதிய படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாந்தினி நடிக்க இருக்கிறார்கள். மேலும் காளிவெங்கட், திருமுருகன், ஜெயகுமார், மைம் கோபி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.மணிகண்டன் இயக்குகிறார். இவர் ‘ஈரம்’ இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்ததக்கது
Comments are closed.