‘கூலிங்கிளாஸ் குணா’வாக நகர்வலம் வரும் சிபிராஜ்..!

195

sibiraj
சமீபத்தில் ‘போக்கிரி ராஜா’ திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.. குறிப்பாக இந்த திரைப்படத்தில் கூலிங்கிளாஸ் குணா என்ற கேரக்டரில் படம் முழுக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு கேரளா வேஷ்டியும் வித்தியாசமான கெட்டப்பில் கலக்கியிருக்கிறார். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை தொடர்ந்து ‘போக்கிரி ராஜா’ படமும் வெற்றி பெற்றுள்ளதால் இரட்டிப்பு சந்தோசத்துடன் வலம் வருகிறார் சிபிராஜ்

வெளியே சென்றால் பார்ப்பவர்கள் எல்லாம் சிபிராஜை கூலிங்கிளாஸ் குணா என்றே அழைக்கிறார்களாம். ரசிகர்கள் மற்றும் மக்களின் பட்டப்பெயரால் மகிழ்ச்சி அடைந்த சிபிராஜ் தொடர்ந்து எங்கு சென்றாலும் படத்தின் வித்தியாசமான கெட்டப்போடு சுற்றி வருகிறார். கூலிங்கிளாஸ் குணா கேரக்டர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால் தொடர்ந்து இதே போன்று வித்தியாசமான கேரக்டர் மற்றும் கெட்டப்பில் நடிக்க சந்தர்ப்பம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறார் சிபிராஜ்.

Comments are closed.