கலாபவன் மணி மறைவுக்கு சூர்யா இரங்கல்..!

232

Surya - kalabavan mani
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி நேற்று மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு மலையாளம் மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.. தமிழில் ‘ஆறு’, ‘வேல்’ ஆகிய படங்களில் கலாபவன் மணியுடன் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

“கலாபவன் மணி எனது மரியாதைக்குரிய மிகச்சிறந்த நண்பர்.. அவருடன் சேர்ந்து செலவிட்ட தருணங்கள் இன்னும் என் மனதில் அப்படியே தங்கி இருக்கிறது.. அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்” என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். உலக நாயகன் கமலும் “மற்றுமொரு மலையாள சகோதரர் மரணம் அடைந்துள்ளார்” என வருத்ததுடன் கூறியுள்ளார்.

Comments are closed.