நடிகர் திலகத்தின் அடுத்த டிஜிட்டல் அதிரடி..!

242

sivakamiyin selvan
நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை தூசி தட்டி எடுத்து டிஜிட்டல் படுத்தி, சினிமாஸ்கோப் ஆக்கி வெளியிட்டார்கள். படம் 100 நாட்கள் ஓடி சினிமா உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது. அதன்பிறகு திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர் என சிவாஜியின் ஹிட் படங்களையும் அதேபோன்று வெளியிட்டார்கள்.

அந்த வரிசையில் அடுத்த அதிரடியாக ‘சிவகாமியின் செல்வன்’ படத்தை டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளார்கள்.. 1974 ஆம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ, லதா, எம்.என்.ராஜம், நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘சிவகாமியின் செல்வன்’. விரைவில் வெளிவரவுள்ள இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த முயற்சி மறைந்த விமான ஓட்டியான, திரு.பிரவீண் அவர்களுக்காக சமர்ப்பிக்கபட்டது. இந்தப்படத்தில் சிவாஜியும் விமான ஓட்டியாக் நடித்திருந்தார் என்பதும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.