சூர்யாவின் ‘24’ தெரியும் ; அது என்ன பிரசாந்துக்கு ‘26’…?

227

Prashanth
கடந்த 2௦13ல் பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான படம் தான் ‘ஸ்பெஷல் 26’. போலி சி.பி.ஐ ஆபிசரான அக்சய் குமாரின் தலைமையில் இயங்கும் கும்பல் ஒன்று ரெய்டு என்கிற பெயரில் கோடீஸ்வரர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணத்தை கொள்ளையடிப்பதுதான் படத்தின் கதை. பாலிவுட்டில் பயங்கரமாக கல்லா கட்டிய இந்தப்படத்தை தனது மகன் பிரசாந்த்தை வைத்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

தற்போது நடித்துவரும் சாகசம் படத்தை தொடர்ந்து, இந்தப்படத்தில் பிரசாந்த் நடிக்கிறார். பிரசாந்துடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நாசர், தம்பி ராமைய்யா, அபி சரவணன், ரோபோ சங்கர், ஜெய் ஆனந்த், பெசண்ட் நகர் ரவி, தேவதர்ஷினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளார்கள். முன்னணி கதாநாயகி ஒருவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் கௌரவ வேடத்தில் தேவயானி மற்றும் சிம்ரன் நடிக்க உள்ளார்கள்.

அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு பிரஷாந்துடன் இணைந்து நடனமாடவுள்ளார் இந்தியில் பிரபல கதாநாயகியான ஜாக்குலின் பெர்னாண்டஸ். திரைக்கதை, வசனம் எழுதி மிகுந்த பொருட்செலவில் பிரஷாந்தின் இருபத்தியாறு படத்தை தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், இன்னும் இந்தப்படத்தின் இயக்குனர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.. சின்னத்திரை தொகுப்பாளரான டிடியின் கணவர் அரவிந்த் இயக்குவதாக சொல்லப்பட்டது. ஒரு விழாவில் தியாகராஜனிடம் தனக்கு இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை தனக்கு கொடுக்குமாறு நேரடியாகவே கேட்டார் இயக்குனர் மாதேஷ்.. ஆனால் வரும் ஜன-1 அன்று படத்தின் இயக்குனர் யார் என்கிற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் தியாகராஜன்.

Comments are closed.