
ரொம்ப நாளாக ஆளையே காணோமே, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விட்டாரா மாதவன் என கலங்கவேண்டாம். இப்போது தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகவிருக்கும் ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். தமிழில் ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா கே.பிரசாத் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் மாதவனுக்கு பாக்ஸர் கேரக்டர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தமிழ், இந்தி (சாலா காதூஸ்) என இரு மொழிகளில் தயாரான இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து வாங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். சிவகார்த்திகேயன் ட்ரெய்லரை வெளியிடுவது குறித்து ரசிகர் ஒருவர், “இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஒருவரின் படத்தின் ட்ரெய்லரை அவரை விட குறைவான பிரபலம் ஒருவர் எப்படி வெளியிடலாம்?” என்று மாதவனிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மாதவன், “சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த மனிதர் மட்டுமல்ல, திறமையான நடிகரும் கூட. தமிழ் திரையுலகில் என்னை விட அவர் பிரபலம்” என்று அந்த ரசிகர்கருக்கு பதிலளித்தார். மாதவனின் இந்த பதிலுக்கு சிவகார்த்திகேயன், “ஒவ்வொருவருமே கொண்டிருக்க வேண்டிய குணம் இது. உங்களது வார்த்தைகளுக்கு நன்றி. என்றும் நீங்கள் தான் பிரபலம்” என்று தெரிவித்திருக்கிறார்
Comments are closed.