பாலா உருவாக்கும் ‘பாண்டவர் அணி’..!

216

bala new film
சும்மா சொல்றாங்கன்னு நினைச்சா உண்மையிலேயே சீரியசாகத்தான் முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா. தற்போது தாரை தப்பட்டை படத்தை முடித்துவிட்ட பாலா தனது அடுத்த படத்தில் ஐந்து ஹீரோக்களை வைத்து இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்ட தகவலை பாலாவே உறுதி செய்துள்ளார். தமிழ்சினிமாவின் மாபெரும் மல்டி ஸ்டாரர் படமாக இது இருக்கப்போகிறது என்பது உறுதி.

ஆம். ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, அதர்வா, ராணா ஆகியோரை இணைத்து தமிழ் திரையுலகின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பாலா. இதில் அரவிந்த் சுவாமியும் ராணாவும் மட்டும் பாலாவுடன் புதிதாக இணைகிறார்கள். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க பாலா திட்டமிட்டு இருக்கிறார்.

Comments are closed.