“அஜித் மூன்று மாதம் ஓய்வு எடுக்கவேண்டும்” – டாக்டர்கள் அறிவுரை..!

223

ajith cure

வேதாளம் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு முழங்கால் வலி ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஜித்துக்கு கடந்த வெள்ளியன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து அவர் நலமாக வீடு திரும்பியுள்ளார்.. ஆனாலும் அவர் மூன்று மாதங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்கவேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனால் தனது அடுத்த படம் குறித்த முடிவுகளை மட்டுமே இந்த இடைவெளியில் எடுப்பார் என்றும், மார்ச்சிற்கு பின்னர்தான் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தெரிகிறது. இயக்குனர் சிவாவின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துப்போய் இன்னொரு படம் சேர்ந்து பண்ணலாம் சிவா என அஜித் கூறியுள்ளதால் அவரது அடுத்த படத்தையும் சிவா தான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

Comments are closed.