“மீண்டும் முந்தைய பொற்காலத்தை கொண்டு வாருங்கள்” – தமிழக முதல்வர் வாழ்த்து..!

215

vishal team met cm 1
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. சரத்குமார் தலைமையிலான அணியினர், விஷால் அணியினரிடம் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஒப்படைத்தனர்.

நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதை தொடர்ந்து, தமிழக நேற்று முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.. இதனைத் தொடர்ந்து நேற்று நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தமிழக முதல்வரைச் சந்தித்தார்கள்.

நடிகர் சங்கத்தின் நிலையைக் கேட்டறிந்து கொண்டு, புதிய நிர்வாகத்தை வாழ்த்தினார் முதல்வர் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து நடிகர் சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை, புதிய நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும். இந்த புதிய நிர்வாகம் அதை செய்யுமென்று நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இச்சங்கத்தின் வளர்ச்சிக்காக அரசின் முழு ஆதரவு இருக்குமென்று உறுதி அளித்த முதல்வரிடம் சங்கத்தின் புதுக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று விஷால் வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் தேதி முடிவானவுடன் தனக்கு தெரிவிக்குமாறும், கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் விஷாலிடம் முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.

முதல்வருடனான சந்திப்பு உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்ததால் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஷால்.

Comments are closed.