
கடந்த மாதம் தனது 13 வயது மகன் பிரசன்ன குமாரை மூளைக்காய்ச்சலுக்கு பறிகொடுத்தார் விவேக். இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது. படப்பிடிப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் சில நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் விவேக். ஆனால் அது தனது சோகத்தை அதிகமாக்கி, தனது குரும்பத்தையும் வருத்தப்படுத்தும் என்பதை புரிந்துகொண்ட விவேக், கடந்த இரண்டு நாட்களாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
தற்போது உதயநிதியுடன் இந்திப்படமான ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் விவேக். ஹன்ஷிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தப்படத்தின் கதை முற்றிலும் நீதிமன்ற பின்னணியில் அமைந்துள்ளது. தற்போது இந்தப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்துவரும் விவேக், தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்களுக்கு டிவிட்டரில் செய்தி சொல்லியுள்ளார்.
Comments are closed.