இஞ்சி இடுப்பழகிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

195

ASY
அனுஷ்கா இன்று 34 வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கவனமாக கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதற்கேற்ற மாதிரி அவரது நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன.

தேவசேனா, ராணி ருத்ரமாதேவியாக மாறுகின்ற அதே நேரம் இன்னொரு பக்கம் கமல், விக்ரம் போல உடம்பை குண்டாக்கி படங்களில் நடித்துவிட்டு மீண்டும் ஸ்லிம்மாகும் இஞ்சி இடுப்பழையாகவும் மிரட்டுகிறார். இவை அத்தனையையும் தனது முப்பது வயதுக்கு மேல் தான் அவர் செய்கிறார் என்பதை கவனித்தால் அனுஷ்காவின் அர்ப்பணிப்பு உணர்வு நம்மை பிரமிக்க வைக்கிறது.

அனுஷ்கா ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கவேண்டும்.. சுலபமான கேரக்டர்களில் நடித்து சம்பாதித்துவிட்டுப் போகலாமே என்றால், “நல்ல படங்கள் தேடிவரும்போது அதற்கான கடின உழைப்பை கொடுத்தே ஆகவேண்டும். இந்த கதாபாத்திரத்திற்கு அனுஷ்கா தான் பொருந்துவார் என நினைத்து என்னைத்தேடி வருபவர்களை நான் ஏமாற்றத் தயாராக இல்லை” என்கிறார் அனுஷ்கா..

இந்த நேர்மைதான் அனுஷ்காவை இந்த உயரத்திற்கு கொண்டுபோய் உட்கார வைத்துள்ளது. இன்று பிறந்தநாள் காணும் இந்த இஞ்சி இடுப்பழகிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.