இன்று 62வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இதில் 56 வருடமாக சினிமாவை சுவாசித்தே வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் இத்தனை வயது என்றாலும் இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் தோற்றார்கள் போங்கள் என்று சொல்லும் வகையில் கமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் காட்டிவரும் வேகம் பிரமிக்க வைக்கிறது. கிட்டத்தட்ட 199௦க்கு முன் பார்த்த கமலை இப்போது பார்க்கமுடிகிறது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை.
காலம் மாற மாற நடிகர்களின் முகத்தோற்றங்களும் அவர்களது ஆரம்ப கால உருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை உள் வாங்கிக்கொண்டுதான் இருக்கும்.. மீண்டும் அவர்கள் தங்களது இருபது வருடத்திய உருவத்தை வெளிக்கொணர்வதும் நடைமுறைக்கு அவ்வளவாக ஒத்துவராத ஒன்று.. ஆனால் கமல் அந்தவகையில் வரும்போதே வரம் வாங்கி வந்தவர்
கமல் படைத்த சாதனைகள், வாங்கி குவித்த விருதுகள், சூட்டப்பட்ட பட்டங்கள் ஒவ்வொரு துறையிலும் அவருக்குண்டான ஆளுமை என பட்டியலிட்டால் இரண்டு புத்தகம் போடவேண்டிவரும்.. இன்று பிறந்தநாள் காணும் நம் உத்தம வில்லனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.