
‘144’ படத்தை இயக்கியிருக்கும் மணிகண்டனிடம் அது என்ன ‘144’ என்று டைட்டில் வைத்திருக்கிறீர்களே என கேட்டதற்கு ரெண்டு கிராமத்துக்கு பிரச்சனை வந்தா தடையுத்தரவு போட எது காரணமா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களோ நிச்சயமா அது கிடையாது.. அந்த காரணம் தான் கதையே.
அதுக்கேத்த மாதிரி ஏம்மா.. இப்படியெல்லாம் கூட பிரச்சனை வருமான்னு ஜெர்க் ஆகிற மாதிரியான பிரச்சனையும், அட.. இதனாலேயா இந்த பிரச்சனை உருவாச்சுன்னு வாயை பிளக்க வைக்கிற மாதிரி ஒரு விஷயத்தையும் முன் வைத்து இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் பஞ்சாயத்து தான் ‘144´ படத்தோட கதை..
.படத்தில் மொத்தம் எட்டு கேரக்டர்கள்.. அதில் மிர்ச்சி சிவா, அசோக் செல்வன் என இரண்டு கதாநாயகர்கள்.. ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் என இரண்டு நாயகிகள்.. எந்த பூட்டையும் எளிதாக திரைக்கு கில்லாடி திருடனாக மிர்ச்சி சிவா. மிகப்பெரிய ரேஸ் சாம்பியனாகவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டு, கிராமத்து பண்ணையார் வீட்டில் காரோட்டும் ட்ரைவராக அசோக் செல்வன்.. இந்த ரெண்டு போரையும் கிராமத்தை விட்டு போகவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருப்பது எது என்பதுதான் சுவாரஸ்ய முடிச்சு..
இவர்கள் தவிர தேவையறிந்து சேவை செய்யும் கல்யாணியாக விலைமாது கேரக்டரில் வருகிறார் ஓவியா.. அதற்காக விலைமாது என்றால் வல்கருக்கு வேலையே இல்லை.. கிராமத்தில் இருக்கும் விலைமாது, அந்த ஊர் மக்களுடன் தன்னை எப்படி தொடர்பு படுத்திக்கொள்கிறார் என்கிற விதமாக ஓவியாவின் கேரக்டர் டீசண்டாகவே இருக்குமாம்.
படம் சிட்டி, கிராமம் என மாறி மாறி நகர்கிறது.. இந்த எட்டு கேரக்டர்களுக்கு ஒரு தனித்தனி கதை உண்டு.. இந்த எட்டு பேரையும் இறுதியில் ஒன்று சேர்க்கும் ஒரு விஷயம் என்ன என்பதுதான் கதையின் மைய முடிச்சு. இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.. ஐந்து பாட்டுகள் உள்ள படத்துக்கு பத்து பாட்டு போட்டு எடுத்துக்குங்க பாஸ் என வெரைட்டி காட்டும் வித்தைக்காரர். படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது
Comments are closed.