
விஜய் நடித்த ‘புலி’ படம் ரிலீஸான தினத்தன்று அந்தப்படத்தை பார்க்கச்சென்ற தாம்பரம் பகுதியை விஜய் ரசிகர்கள் இருவர் விபத்தில் பலியானார்கள்.. இந்த தகவல் விஜய்யின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது.. அப்போது புலி படத்தின் ரிலீஸ் மற்றும் வருமான வரி ரெய்டு பிரச்சனைகளை கவனித்துக்கொண்டிருந்தார் விஜய்.
அதன்பின் நேற்று விபத்தில் இறந்த ரசிகர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.. மேலும் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் அளித்ததோடு, எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தாராளமாக அணுகலாம் என அவர்களுக்கு தைரியமும் கூறி வந்துள்ளார் விஜய்.
Comments are closed.