“மீண்டும் கீர்த்தி சுரேஷா”..? ; தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்த பி.சி.ஸ்ரீராம்..!

244

பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் மீண்டும் அவருடன் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ரஜினி முருகன்’ இன்னும் வெளிவராத நிலையில் அடுத்த படத்திலும் இவர்கள் இணைந்து நடிக்க காரணம் ஒன் அன்ட் ஒன்லி, கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் தான்.

இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை படித்து முடித்ததுமே வேறெந்த யோசனையும் வேண்டாம் கீர்த்தி சுரேஷ் இதற்கு சரியாக செட்டாவார் என்பது தான் தயாரிப்பாளரிடம் பி.சி.ஸ்ரீராம் சொன்னது. இப்போது தான் இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்கள்..” என தயங்கிய தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்த பி.சி.ஸ்ரீராம், கீர்த்தியின் நடிப்பும் தமிழ் பேசும் லாவகமும் படத்தில் ஹீரோவுக்கு சமமாக ட்ராவல் பண்ணும் கதாநாயகி கேரக்டரை சரியாக வெளிப்படுத்தும் என கூறியதோடு, கையோடு போட்டோ ஷூட்டையும் எடுத்து முடித்துள்ளார்.

Comments are closed.