திருட்டு விசிடி – விமர்சனம்

216

காமெடி நடிகர் ‘காதல்’ சுகுமார் இயக்குனராக மாறி எடுத்துள்ள படம் தான் இந்த திருட்டு விசிடி.

கள்ளநோட்டு மாற்றும் கும்பலின் கமிஷன் ஏஜென்ட்டாக இருக்கும் பிரபாவுக்கு தூத்துக்குடியில் இருந்து சிலை ஒன்றை டெம்போ ட்ராவலர் மூலம் கடத்தி வரும் அசைன்மெண்ட் கிடைக்கிறது. இதற்காக நாடக நடிகர்களான சுகுமார், தேவதர்ஷினி, ரீத்து ஆகியோரை விஷயத்தை சொல்லாமல் ஷூட்டிங் என கூறி அழைத்து செல்கிறார் பிரபா..

சிலை கடத்தும் வண்டியில் கஞ்சாவும் இருப்பது தெரியவர, நாடக கோஷ்டி டென்ஷனாகிறது.. ஆனால் அவர்களுக்கு அதிக பணம் தருவதாக சொல்லி அவர்கள் வாயை அடைக்கிறார் பிரபா. திரும்பி வரும் வழியில் வில்லன் குரூப் அந்த சிலையை தேடி துரத்துகிறது.

இன்னொரு பக்கம் இவர்கள் சிலை கடத்துவது தெரியாமல் போலீஸ் கும்பல் ஒன்று இவர்களுக்கு உதவிக்கு வருகிறது.. இறுதியில் சிலை வில்லன் கைக்கு போனதா..? இவர்கள் போலீசாரிடம் சிக்கினார்களா என்பது க்ளைமாக்ஸ்.

காமெடிப்படம் எடுக்கிறேன் என தான் இதுவரை கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் நம் மீது இறக்கி வைத்திருக்கிறார். காமேட்ப்படம் என்றால் படம் முழுவதும் காமெடி சேஷ்டைகளும் தத்துப்பித்து டயலாக்குகளும் தான் பேசவேண்டுமா என்ன..? அதுமட்டுமல்ல, படத்தில் அதி முட்டாள்கள் வில்லன் கோஷ்டியா.? போலீஸ் கோஷ்டியா என பட்டிமன்றமே வைக்கலாம்.

ஆனால் க்ளைமாக்சில் சூப்பர்மேன் போல என்ட்ரி கொடுத்து, வில்லன் கோஷ்டி, ஹீரோ கோஷ்டி என பாரபட்சம் பார்க்காமல் செந்தில் விடும் பஞ்ச் உண்மையில் சிரிக்கத்தான் வைக்கிறது. குறைந்த பட்ஜெட் என்றாலும் அதிலும் ஒரு நல்ல கதையை சொல்லியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்குமே சுகுமார்..? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

Comments are closed.