இன்று முதல் பூஜையுடன் ‘வீரசிவாஜி’ படப்பிடிப்பு ஆரம்பம்..!

194

தாத்தா பேரில் பேரன் படம் நடிப்பது என்பது சினிமாவில் அபூர்வமான நிகழ்வு. அது விக்ரம் பிரபுவுக்கு வாய்த்திருக்கிறது.. ‘வீரசிவாஜி’ என்கிற பெயரில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று காலை புதுச்சேரியில் போடப்பட்டு, படப்பிடிப்பும் துவங்கியது.. இந்தப்படத்தின் மூலம் (பேபி) ஷாமிலி தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த பூஜையில் மகனை வாழ்த்தும் விதமாக பிரபுவும் அவரது மனைவியும் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களது மகன் நடிக்கும் முதல் நாள் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருப்பது இதுதான் முதன்முறையாகும். ‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Comments are closed.