நாளை திட்டமிட்டபடி படங்கள் வெளியாகும் ; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு..!

213

இன்று காலையில் இருந்து.. இல்லையில்லை நேற்று இரவிலிருந்து தமிழ் சினிமாவை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறி வந்தன. ‘பாயும் புலி’ பட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் மிரட்டல் விடுத்தார் என கூறி, நாளை(செப்-4)முதல் தமிழ் சினிமாவில் எந்தப்படமும் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு நேற்று இரவு அதிரடியாக அறிவித்தார்.

இதனால் நாளை திட்டமிட்டபடி படங்கள் வெளியாகுமா, ஆகாதா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.. இன்று மாலை மீண்டும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒன்றுகூடி பேசி, தாங்கள் ஏற்கனவே அறிவித்த முடிவை வாபஸ் வாங்கிக்கொண்டனர். இதனால் நாளை விஷாலின் பாயும் புலி, அசோக் செல்வனின் ‘சவாலே சமாளி’ மற்றும் ‘போக்கிரி மன்னன்’ ஆகிய படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

Comments are closed.