ஆகஸ்ட்-14ல் 1000 தியேட்டர்களில் ‘வாலு’ ரிலீஸ்..!

209

இனி ‘வாலு’வின் பிரச்சனை வளர்ந்துகொண்டே செல்லாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஆகஸ்ட்-14ல் தமிழ்நாடு உட்பட மற்ற பகுதிகளையும் சேர்த்து சுமார் 1000 தியேட்டர்களில் ‘வாலு’ ரிலீஸ் ஆகிறது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிம்புவின் தந்தை இந்தப்படம் வெளிவருவதற்காக கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தவிர இந்தப்படம் பயங்கரமான இடியாப்ப சிக்கலில் இருந்து விடுபட்டு டக்கென வெளிவர உதவியதில் நடிகர் விஜய்க்கும் கோவை ஏரியாவில் விஜய் படங்களை ரெகுலராக வாங்கி வெளியிடும் காஸ்மோ சிவகுமாருக்கும் மிகப்பெரிய பங்கு இருப்பதாக கூறிய டி.ராஜேந்தர் விஜய் ஒரு உண்மையான பச்சை தமிழன் என மனதாரா பாராட்டியுள்ளார்.

Comments are closed.