கஜோலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

190

பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகைகளில், கஜோலுக்கு முக்கிய இடம் உண்டு. தில்வாலே துல்கனியா லீ ஜயங்கே, குச் குச் கோத்தா ஹை ஆகிய படங்களின் மூலம், ஒருகாலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் தான் கஜோல். இவர் தமிழில் மின்சாரக்கனவு என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

பின்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை மணந்து இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆன கஜோல், இப்போது மீண்டும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றளவும் கஜோலுக்கு கிடைத்த ரசிகர்கள் அவர்மீது அதே பிரியத்துடன் தான் இருக்கிறார்கள். இன்று பிறந்தநாள் காணும் கஜோலுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.