
நடிகர்சங்கத்தில் மல்டிபிளக்ஸ் கட்டடம் கட்டக்கூடாது என்பதுதான் இன்று சரத்குமாரை எதிர்த்து, விஷால் அணி திரள காரணம். காம்ப்ளக்ஸ் மூலம் மாதம் 25 லட்சம் வருமானம் சங்கத்துக்கு வரும் என்கிறார் சரத்குமார்… இதுகுறித்து டிவி சேனல் விவாதம் ஒன்றின்போது விஷாலிடம் காம்ப்ளக்ஸ் மூலம் கிடைக்கவிருக்கும் 25 லட்சம் வேண்டாம் என்றால் அதைவிட அதிக வருமானத்தை மாதந்தோறும் பெற வேறு என்ன ஐடியா வைத்துள்ளீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஷால், கல்யாண மண்டபம், நாடக அரங்கம் உள்ளிட்ட அரங்கங்கள் கட்டி வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் சேர்க்கலாம் என்றார்.. குறிப்பாக தி.நகரில் முக்கியமான இடத்தில் அதுவும் குறைந்த அளவிலான இடத்தில் எந்தவித போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தாமல் பிரசாந்த் கோல்டு டவர் என்கிற மிகப்பெரிய கட்டடத்தை கட்டி அதன்மூலம் பல மடங்கு வருமானம் பார்த்துவரும் பிரசாந்தை அழைத்து சில யோசனைகளை கேட்க உள்ளதாக கூறியுள்ளார்.
Comments are closed.