அரசியல் வாழ்க்கையின் நிழல் உலகத்தை அம்பலப்படுத்தும் பாபி சிம்ஹா..!

222

பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா என இரண்டு தேசிய விருதுபெற்ற நடிகர்களை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு அறிமுக இயக்குனரான தனக்கு கிடைத்திருப்பதில் அளவிடமுடியாத சந்தோஷத்தில் இருக்கிறார் ‘கோ-2’ படத்தை இயக்கிவரும் சரத். கோ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.

இது கோ படத்தின் தொடர்ச்சி அல்ல என்றாலும், அந்தப்படத்தை போல சூடான அரசியல் களம் இதிலும் இருக்கிறதாம். அரசியல் வாழ்க்கையின் நிழல் உலகு விஷயங்களை இந்தப்படம் கோடிட்டு காட்டும் என்கிறார் இயக்குனர் சரத். இந்தப்படத்தில் லியோன் ஜேம்ஸ் என்கிற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளார்களாம்.

Comments are closed.