‘உப்புக்கருவாடு’ படத்தை வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்..!

193


‘கெளரவம்’ படத்திற்கு பிறகு ஒரு கௌரவமான இடைவெளி விட்டு ராதாமோகன் இயக்கியுள்ள படம் தான் உப்புகருவாடு.. நகைச்சுவை நடிகரான கருணாகரனை சோலோ ஹீரோவாக இவர் அறிமுகப்படுத்துகிறார் என்கிற போதே படத்தில் நிச்சயம் இன்ட்ரஸ்டிங்கான ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளார்.

கருணாகரன் ஜோடியாக ‘அட்டகத்தி’ நந்திதா நடித்துள்ள இந்தப்படத்திற்கு புதியவரான ஸ்டீவ் வாட் இசையமைத்திருக்கிறார். அதைவிட சுவராஸ்யமான விஷயம் இயக்குனர் கௌதம் மேனன் இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் கைப்பற்றியுள்ளார்.

Comments are closed.