நாகார்ஜுனாவுடன் இணைந்து வம்சி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஐரோப்பா கிளம்ப இருக்கின்றனர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இதுவரை எந்த படக்குழுவினரும் கால் வைத்திராத ஐரோப்பாவில் உள்ள செர்பியா நாட்டின் தலைநகரான பெல்க்ரேட் நகரத்தில் முதன்முறையாக கார்த்தி & கோ தான் கால் வைக்கின்றனர்.
இங்கே கிட்டத்தட்ட 30 நாட்கள் கார் சேசிங் மற்றும் சண்டைக்காட்சிகளை மிக பிரமாண்டமான முறையில் படமாக்க இருக்கின்றனராம். சமீபத்தில் சிறந்த ஒளிப்பதிவாளராக பிலிம்பேர் விருது பெற்ற பி.எஸ்.வினோத் தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளர். அதனால் வெளிநாட்டு படப்பிடிப்பு காட்சிகளில், ரசிகனின் கண்களுக்கு விருந்து காத்திருக்கு என்றே சொல்லலாம்..
அதேபோல சிறந்த இசையமைப்பாளராக பிலிம்பேர் விருதுபெற்ற மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்க இருப்பது இன்னொரு சிறப்பு. தமன்னா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படம், இந்த வருட இறுதியில் ரிலீஸாகும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
Comments are closed.