முடிந்தது வி.எஸ்.ஓ.பி ஷூட்டிங் ; ஆகஸ்ட்-14ல் ரிலீஸ் செய்ய திட்டம்..!

190

இயக்குனர் எம்.ராஜேஷ் மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பும் விதமாக ‘வாசுவம் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ அதாவது வி.எஸ்.ஓ.பி படத்தை இன்ச் பை இன்ச்சாக இழைத்துள்ளார். தனது முந்தைய படத்தின் தோல்வி மூலம் தான் தள்ளாடியபோது, கைகொடுத்து தாங்கி, தனக்காக சொந்தப்படம் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடிக்க முன்வந்த ஆர்யாவுக்கு எப்படியும் வெற்றியை பரிசாக தரவேண்டும் என்பதுதான் அவரது எண்ணமெல்லாம்.

அதனால் கடந்த ஆறு மாதங்களில் படப்பிடிப்பை கச்சிதமாக நடத்தி முடித்து, சமீபத்தில் வெற்றிகரமாக பூசணி உடைத்துள்ளார் ராஜேஷ். ராஜேஷுக்கு கைகொடுக்கும் விதமாக அவரது வலதுகரமான சந்தானமும், தான் ஹீரோவாகத்தான் நடிப்ப்ர்ன் என்கிற கொள்கையை தளர்த்திவிட்டு அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். தமன்னா ஹீரோயினாக நடிக்க, தாமிரபரணி பானு, கருணாகரன், விபின் சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Comments are closed.