காரைக்குடியில் இருந்து காஷ்மீருக்கு பயணிக்கும் விக்ரம் பிரபு..!

232

 

ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் தற்போது இயக்கிவரும் ‘வாகா’ படத்தில் நடிக்கிறார்விக்ரம் பிரபு. இந்திய-பாகிஸ்தான் எல்லையான ‘வாகா’வின் பெயரை படத்திற்கு சூட்டியிருப்பதில் இருந்தே இது ராணுவம் சம்பந்தமான படம் என்பது தெரிகிறது.

குமரவேலனின் முந்தைய படமோ ஆட்டிசம் நோயும் அதன் விழிப்புணர்வு பற்றிய சமூக பொறுப்புணர்வும் கொண்டதாக இருந்தது.. ஆனால் ‘வாகா’வில் பக்கா ரானுவக்கதையோடு களம் இறங்கி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் குமரவேலன். ஆக்‌ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் ராணுவ அதிகரியாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்தில் ராணுவ அதிகாரியின் காதலைப்பற்றி சொல்கிறாராம் குமரவேலன்.

இந்தப்படத்தின் முதல் ஷெட்யூலை காரைக்குடியிலும் இரண்டாவது ஷெட்யூல் கிளைமாக்ஸ்  ஊட்டியிலும் நடத்தி முடித்து விட்டு, மூன்றாவது ஷெட்யூலுக்காக காஷ்மீருக்கும், இந்திய-பாகிஸ்தான் பார்டரான வாகாவுக்கும் பயணப்பட இருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகிறார் சிக்மங்களூரை சேர்ந்த ரன்யா. சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பில் மழைக்காட்சி ஒன்றை படமாக்குவதற்காக செயற்கை மழைக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம். ஆனால் நிஜமாகவே மழை வந்துவிட, அதில் தங்களுக்கு தேவையான காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியதை ஆச்சர்யத்துடன் விவரிக்கிறார் இயக்குனர் குமரவேலன். இந்தப்படத்தை விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Comments are closed.