
ஒரு படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகங்களை எடுப்பவர்கள் ஹீரோ, ஹீரோயின், குணச்சித்திர நடிகர்கள், கதை உட்பட முதல் பாகத்திற்கு சம்பந்தமில்லாமல் மாற்றிக்கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் ஹரி ரொம்பவே வித்தியாசமானவர்.. சிங்கம் படத்தின் தொடர் பாகங்களில் சூர்யா, அனுஷ்காவுடன் ராதாரவி, நாசர் உட்பட முந்தைய நடிகர்களையும் அப்படியே நடிக்கவைக்க இருக்கிறார் ஹரி.
இதில் இரண்டாம் பாகத்தில் கதையின் தேவைக்கு ஏற்ப ஹன்ஷிகாவை இரண்டாவது கதாநாயகியாக உள்ளே கொண்டுவந்தவர் அடுத்து ‘சிங்கம்-3’யில் ஸ்ருதிஹாசனை இன்னொரு கதாநாயகி ஆக்கியுள்ளார். வழக்கம்போல தூத்துக்குடிதான் பிரதான கதைக்களமாக இருக்கும் என்றாலும், கோவா மற்றும் பாரீஸ் ஆகிய இடங்களிலும் பட்டப்படிப்பை நடத்த இருக்கிறாராம் ஹரி.. அதேபோல ஹரி மற்றும் சூர்யா இருவருடனும் முதன் முறையாக இசைக்கூட்டணி அமைக்கிறார் அனிருத்.
Comments are closed.