சமுத்திரக்கனியின் சீடர் இயக்கும் ‘ரீங்காராம்’..!

189

 

வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். ஆனால் அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக்களமாக்கி   ‘ரீங்காரம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவகார்த்திக்.. இவர் சமுத்திரக்கனி, ‘அரசு’சுரேஷ் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். பாலா என்கிற புது முகம் நாயகன். பிரியாங்கா நாயகி. முக்கியமான வேடங்களில் கலாபவன் மணியும், ‘ஆடுகளம்’ ஜெயபாலனும் நடித்துள்ளனர்.

மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளைவைத்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் சிவகார்த்திக், இது புதிய கதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் கோணங்களில் வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பதாக கூறுகிறார்.

Comments are closed.