ஜூன் மாத ரேஸில் காமெடி ஹீரோக்கள்..!

215

 

நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக மாறுவது தமிழ்சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும் மூன்று முன்னணி நகைச்சுவை நடிகர்கள் தாங்கள் ஹீரோவாக நடித்துள்ள படங்களை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடுகிறார்கள் என்பது நிச்சயமாக தமிழ்சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தான்.

இன்று சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படம் வெளியாகிறது. அடுத்தவாரம் ஜூன்-19ல் வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள ‘எலி’ வெளியாகிறது. அதற்கடுத்த வாரம் ஜூன் 26ல் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள ‘பாலக்காட்டு மாதவன்’ படம் ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களும் வெற்றிபெற்றால் தமிழ்சினிமாவில் புதிய பாதை ஒன்றை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

Comments are closed.