அருள்நிதி படத்தை வாங்கியது விஜய் டிவி..!

186

வரும் ஜூன்-19ஆம் தேதி அருள்நிதி நடித்துள்ள நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் ரிலீசாகிறது ஜே.எஸ்.கே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.. ஒழுக்கத்தில் முன்மாதிரியாக திகழும் ஒரு கிராமமும், அந்த ஒழுக்கம் தங்களக்கு அசௌகரியம் தருகிறது என கருதும் நாலு போலீசையும் பற்றிய கதை தான் இந்தபடம்.

காமெடிக்கு சிங்கம்புலியும் பகவதி பெருமாளும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர். சமீபத்தில் அருள்நிதி நடித்து வெளியான ‘டிமாண்டி காலனி’ படம் தற்போது வரவேற்புடன் ஓடுவதை கவனித்து பார்த்த விஜய் டிவி, ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பறியுள்ளது.

Comments are closed.