அக்சய் குமாருடன் விக்ரமின் ‘பிக் டீல்’..!

199

விக்ரம் ஏதோ பாலிவுட் படத்தில் நடிக்க அக்சய் குமாருடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார் என நினைத்துவிடவேண்டாம்.. இது பிஸினஸ் டீல்.. அதாவது பிக் டீல் டிவி என்கிற 24 மணி நேர ஷாப்பிங் சேனல் ஒன்றின் விளம்பர தூதர் மட்டுமல்லாமல் அதன் பங்குதாரர் ஆகவும் மாறியிருக்கிறார் விக்ரம். .

இந்த டிவியை ஆரம்பித்தது நடிகை பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா.. இவருடன் பாலிவுட் ஹீரோ அக்சய் கைகோர்க்க, விக்ரமோ தமிழ்நாட்டில் காலூன்ற அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளார். இதற்கான துவக்கவிழாவை நேற்று சென்னையில் சத்யம் தியேட்டரில் வைத்து இந்த மூவரும் நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் ஆன்லைனிலாகட்டும், தொலைக்காட்சி மூலமாகட்டும் நம்பகமான தயாரிப்புகளை விற்பதுதான் இவர்களின் நோக்கம். பெரும்பாலும் விக்ரமால் தரம் உறுதி செய்யப்பட பொருட்களும், விக்ரம் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் அறிமுகப்படுத்தும் பொருட்களும் வாங்கிய ஒரு பொருள் சரியில்லை என்றால் திருப்பி கொடுத்துவிடலாம் என்பது இதில் வசதி.

பிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் மூலம் விரும்பிய பொருட்களை வாங்கலாம். ஆனால் த்ரிஷா விரும்பி அணியும் புடவையின் அதே மாதிரியையோ, அல்லது விக்ரம் பயன்படுத்தும் அதே பர்ப்யூம் மாதிரியோ வாங்க முடியாதல்லவா..? அப்படி பிரபலங்கள் பயன்படுத்தும் பிராண்ட்களை வாங்க வழிவகை செய்துகொடுக்கிறது இந்த பிக் டீல் டிவி.

Comments are closed.