
ஐஸ்வர்யா தனுஷின் இரண்டாவது படைப்பான ‘வை ராஜா வை’ இன்று ரிலீசாகியுள்ளது. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் வசந்த், மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் கூட நடித்துள்ளார்கள். ஆனால் இதையெல்லாம் விட இந்தப்படத்தில் ‘கொக்கி குமார்’ வேடத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதுதான் ஹாட் டாபிக் ஆகிவிட்டது.
தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்த ஐஸ்வர்யாவுக்கு, திடீரென அவரது ‘கொக்கி குமார்’ கதாபாத்திரத்தை உள்ளே கொண்டுவரலாமே என்கிற எண்ணம் ஏற்பட, அதை தனுஷிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு தனுஷ் ஒப்புக்கொண்டாலும், அவர் அந்த நேரத்தில் ரொம்பவே பிசியாக இருந்ததால் தயக்கம் காட்டியிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவோ வெறும் ஐந்து மணி நேரம் மட்டும் ஸ்பாட்டிற்கு வந்துட்டு போங்க என கூறி, அந்த நேரத்திற்குள் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டாராம்.
Comments are closed.