கதைக்காக முதல் படத்திலேயே மொட்டை போட்ட நடிகை..!

220

சமீபத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை, அந்தப்படத்திற்காக கூந்தலை பாதியாக வெட்டவேண்டும் என்று சொன்னதற்காகவே படமே வேண்டாம் என மறுத்துவிட்டார் நடிகை ஆண்ட்ரியா. அவர் சீனியர் மறுத்துவிட்டார். ஆனால் அறிமுக நடிகை ஒருவர் தனது முதல் படத்திலேயே கேரக்டருக்காக மொட்டைபோட்ட அதிசியமும் இங்கே தான் நடந்திருக்கிறது.

அந்த நடிகை தான் ‘கிடா பூசாரி மகுடி’ என்கிற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நட்சத்திரா. அவரது கதாபாத்திரம் மொட்டை போடவேண்டும் என இயக்குனர் சொன்னதும் எந்தவித சங்கடமோ, மறுப்போ இல்லாமல் மொட்டை போட்டு நடித்துள்ளாராம் நட்சத்திரா.

கிராமத்து கோவிலில் ஆட்டுக்கிடா வெட்டும் பூசாரியாக இருக்கும் மகுடி என்பவனின் கதைதான் இந்தப்படம். காதலித்தவனோ, வீட்டில் பார்த்து கட்டி வைத்த மாப்பிள்ளையோ, திருமணத்துக்கு பின் வருவதுதான் உண்மையான காதல் என்பதை கிராமிய பின்னணியில் சொல்லும் படம் இது என்கிறார் இயக்குனர் ஜெ.ஜெயகுமார்.

தமிழ், ராம்தேவ், நட்சத்திரா, என்ற புதுமுகங்களுடன் சிங்கம்புலி, பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள். நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் தமிழழகன், “நான் சினிமாவில் ஜெயிக்க ஆசைப்பட்டேன்.. ஆனால் ஒரு கட்டத்தில் ஒதுங்கி நின்றுவிட்டேன்.. ஆனால் எனது மகனை அவன் விருப்பப்படி நடிகனாக்கி அழகு பார்க்கிறேன்” என்று கூறினார். இவர் தற்போது அதிமுக எம்.எல்.ஏவும் கூட.

Comments are closed.