நகை டிசைன் பிசினஸில் இறங்கினார் தமன்னா..!

180

சமீபத்தில் ஒயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார் தமன்னா. இந்த நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி டிசைனர்கள் மட்டுமின்றி, தமன்னாவும் நகைகளை வடிவமைத்தார். தமன்னாவின் தந்தை, நகை வியாபாரி என்பதும், அதன் காரணமாக தமன்னாவும் நகை வடிவமைப்பில் கலக்குபவர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை..

இந்த நகைகளை விற்பனை செய்வதற்காக ஒரு புதிய இணையதளத்தை தமன்னா நேற்று தொடங்கியபோதுதான் அட தமன்னா இதெல்லாம் பண்ணுவாரா என்கிற ரகசியம் உடைந்திருக்கிறது. தனது தந்தை சந்தோஷ் பாட்டியாவுடன் சேர்ந்து இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளார் தமன்னா.

“முதலில் நான் வடிவமைத்த நகைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் தான் இந்த வடிவமைக்கும் பணியை தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். இன்றைய பெண் தலைமுறையினருக்கு ஏற்றவாறு எனது வடிவமைப்புகள் இருக்கும். நான் வடிவமைக்கும் நகைகள் அழகாகவும், சமகாலத்திற்கு ஏற்றதாகவும், அனைத்து விழாக்களின் போது அணிந்து கொள்ளும் வகையிலும் இருக்கும்” என்கிறார் தமன்னா.

Comments are closed.