
‘அஞ்சுக்கு ஒண்ணு’ என டைட்டில் வைத்து ஒரு படம் தயாராகி வருகிறது என கேள்விப்பட்டவுடன் என்ன ஐடியாவுல தான் இப்படி டைட்டில் வைக்கிறாங்க என்கிற கேள்விதான் முதலில் தோன்றியது. இதே சந்தேகத்துடன் படத்தின் இயக்குனர் வி.ஆர்.வியிடம் விளக்கம் கேட்டால், உடனே மகாபாரத பாஞ்சாலி கேரக்டரை அவுட்லைனாக காட்டுகிறார்.
அதாவது கட்டட வேலை செய்து இஷ்டம்போல வாழ்க்கையை ஓட்டும் ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.. அதன்பின் அவர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதுதான் கதையாம். இரண்டு பேருக்கு இடையே ஒரு பொண்ணு வந்தாலே கதை கந்தல் தான்.. இதில் அஞ்சு பேர் என்றால் கேட்கவே வேணாம்..
அதற்காக காதல் என்கிற ரூட்டிலேயே கதையை நகர்த்தாமல் சேமிப்பின் அவசியத்தையும் இதில் வலியுறுத்துகிறார்களாம்.. புதுமுகங்கள் என்றில்லாமல் ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்த முகங்களாகத்தான் படத்தில் நடித்துள்ளார்களாம். படத்தின் தயாரிப்பாளருக்கு ரஷ் போட்டுப்பார்த்ததில் ரொம்பவே திருப்தியாகிவிட, அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் இயக்குனர் வி.ஆர்.விக்கே தந்துள்ளாராம்.
Comments are closed.