
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-2’வுக்கு அதன் முந்தைய பாகத்தை போலவே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இப்படத்தில் ஏழு வயது சிறுமி முதல் எழுபது வயதான பாட்டி தோற்றம் வரை, பல்வேறு கெட்டப்புகளில் நடித்து பிரமிக்க வைத்துள்ளார் லாரன்ஸ். குறிப்பாக குழந்தைகளின் பல்ஸை சரியாக பிடித்துள்ளார் லாரன்ஸ்.
ஏற்கெனவே இந்தப்பட ரிலீஸுக்கு முன்னரே படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினி, ”உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும்” என்று லாரன்ஸை பாராட்டினார். அவர் சொன்ன வாக்கோ என்ன்னவோ, தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இத்திரைப்படம் வசூலை வாரிக் குவிக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் ராகவா லாரன்ஸை தன் வீட்டுக்கு அழைத்துப் பாராட்டி விருந்தளித்துள்ளார்… ஆக, வசூலோடும் வாழ்த்துக்களும் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் லாரன்ஸ்.
Comments are closed.