ஹேப்பி பர்த்டே பார்த்திபன்..!

229

பொதுவாக பார்த்திபன் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக மாறிவிடும்.. அந்தவகையில் தமிழ்சினிமா ரசிகர்கள் ரசித்துப்பார்க்கும் ஒரு இயக்குனர்.. நடிகராக பார்த்திபன் இதுவரை தனது இரட்டைக்குதிரை சவாரியை சரியாகவே செய்துவந்திருக்கிறார். டைரக்சனாகட்டும், நடிப்பாகட்டும் பார்த்திபனுக்கு என ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது.

அதுதான் அவரை இன்றும் தமிழ்சினிமாவில் ஒரு வெற்றிகரமான நபராக உலாவர வைத்திருக்கிறது. பல சீனியர் இயக்குனர்கள் சினிமாவுடன் அப்டேட் ஆக முடியாமல், ஒதுங்கிவிட்ட நிலையில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என பெயர் வைத்து, துணிச்சலாக ‘கதையே இல்லை’ என கேப்ஷன் போட்டு படம் எடுப்பதும் பார்த்திபன் மட்டுமே செய்யக்கூடிய புதுமைகள்.

ஆக, பார்த்திபன் கனவுகளுக்கு மட்டும் ஒய்வு இல்லை என்றே தெரிகிறது. அட்சர சுத்தமாக, அழகு தமிழ் பேசும் பார்த்திபனுக்கு, தமிழ்ப்புத்தாண்டு தினமாகிய இன்றுதான் பிறந்தநாள் என்பது எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா..? இன்று பிறந்தநாள் காணும் பார்த்திபனுக்கு நமது behind frames தனது இனியபிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.