
தலைப்பை படித்ததும் ஒரு ஆர்வம் வருகிறது தானே.. அதுதான் சிம்புவின் ஸ்பெஷாலிட்டி. சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை அடிக்கடி உடைந்து விழுவதும் சிம்புவின் ‘வாலு’ பட ரிலீஸ் தேதி அடிக்கடி மாறுவதும் வாடிக்கையாகவே ஆகிவிட்டது. சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா, நண்பனாக சந்தானம் நடித்துள்ள இந்தப்படத்தை விஜய்சந்தர் என்பவர் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
‘தல’ பிறந்த நாளான மே-1ஆம் தேதி ‘வாலு’வை எப்படியாவது ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என ஆவலாக இருந்த சிம்புவுக்கு, அதே தேதியில் ரிலீஸாகும் கமல் படம் ‘உத்தம’வில்லனாய் மாறவே, தற்போது மே-9ஆம் தேதி உறுதியாக ரிலீஸ் பண்ணிவிடலாம் என இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
Comments are closed.