மார்ச்-6ஆம் தேதி ட்ராபிக் ஜாமில் சிக்கும் தமிழ் சினிமா..!

240

எதனால் என தெரியவில்லை.. வரும் மார்ச் 6ஆம் தேதி பெரிதும் சிறிதுமாக கிட்டத்தட்ட பத்து படங்கள் இங்கே வெளியாகின்றன. அதில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது ‘சித்தார்த் நடித்துள்ள ‘எனக்குள் ஒருவன்’ தான் கன்னட ‘லூசியா’ ரீமேக்கான இந்தப்படம் அங்கே பம்பர் ஹிட் அடித்துவிட்டு, இங்கே வருவதால் அதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

அடுத்ததாக ஆர்.கே – ஷாஜி கைலாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என் வழி தனி வழி’ மற்றும் ‘தொப்பி’ ஆகிய படங்கள் இரண்டாம் கட்ட எதிர்பார்ப்புள்ள படங்கள்.. இவை தவிர ‘ஆயா வட சுட்ட கதை’, ‘இரவும் பகலும்’, ஏ.வெங்கடேஷின் ‘ரொம்ப நல்லவண்டா நீ’, ‘இஞ்சி முறப்பா’, ‘மகா மகா’, ‘சேர்ந்து போலாமா’ என மொத்தம் எட்டு தமிழ்ப்படங்கள் அதே நாளில் வெளியாகின்றன.

இதுபோதாதென்று ஹாலிவுட்டில் இருந்து ‘வைல்ட் கார்டு’ படம் மூலமாக ஆக்சன் கிங் ஜேசன் ஸ்டேதமும், முரட்டு கைதி’ கன்னட ரீமேக் மூலமாக ‘நான் ஈ’ சுதீப்பும் தமிழக திரைக்களத்தை சூடாக்க வருகிறார்கள். மொத்தம் பத்து படங்கள் வெளியாவதால் தமிழ் திரையுலகம், அதாவது தியேட்டர் உலகமே பட நெரிசல்களால் ஏற்படப்போகும் ட்ராபிக் ஜாமால் திணறப்போவது உறுதி.

Comments are closed.