ஆர்யா, அனுஷ்காவுடன் ஸ்ருதிஹாசன் நட்பு கூட்டணி..!

257


ராஜபாட்டை, இரண்டாம் உலகம் என சில சறுக்கல்களை சந்தித்தாலும் கடந்த வருடம் சந்தானத்தை வைத்து தயாரித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் வெற்றியாள சுதாரித்துகொண்டது பிவிபி புரொடக்சன். இதோ இப்போது ‘இரண்டாம் உலகம்’ ஜோடியான ஆர்யா, அனுஷ்காவை மீண்டும் இரண்டாவது முறையாக இணைத்து வைத்துள்ளது. ஆம்.. பிவிபியின் புதிய படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் நடிக்கிறார்கள் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இந்தப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. முக்கியமான விஷயம், இதில் ஸ்ருதிஹாசன் நட்புக்காக கௌரவ தோற்றத்தில் வருகிறார்.

ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு மரகதமணி என்கிற பெயரில் இவர் நன்கு பரிச்சயமானவர் தான். கனிகா திலோன் கொவேலமுடி என்பவர் கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை இயக்குனர் பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார். முதல்நாள் படப்பிடிப்பை இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்க, பிவிபியின் மனைவி ஒளிப்பதிவு செய்ய, கனிகா திலோன் கொவேலமுடி கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளர்

Comments are closed.