தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு

171

கடந்தவாரம் தெலுங்கில் ‘பொட்டுகாடு’ என்ற படம் ரிலீஸானது. இதில் மஞ்சு மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் தான் மஞ்சு மனோஜ். அவருக்கு ஜோடியாக சாக்‌ஷி சௌத்ரி நடித்திருந்தார். பவன் வாண்டையார் என்பவர் இந்தப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப்படம் கன்னடத்தில் வெளியான ‘கோவிந்தாய நமஹ’ படத்தின் ரீமேக்தான்.

இதுவரை சொன்னதெல்லாம் இந்தப்படத்தை பற்றிய சாதாரண விஷயம் தான். இனிதான் ஸ்பெஷல் நியூஸே.. தற்போது மஞ்சு மனோஜ் நடித்த பொட்டுகாடு படம் ரிலீஸாகி நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் சிம்பு. இப்போது இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கப்போகிறார் நடிகர் சிம்பு.

காரணம் சிம்புவும் மஞ்சு மனோஜும் திக் ஃப்ரண்ட்ஸ். நடிகை டாப்ஸி சம்பந்தமாக ஒரு பார்ட்டியில் ஏற்பட்ட பிரச்சனையில் மங்காத்தா படத்தில் நடித்த மகத்துடன் அடிதடியில் இறங்கி கட்டிப்புரண்டாரே அவர்தான் மஞ்சுமனோஜ். அந்த கலாட்டாவுக்குப் பின்னர்தான் இவரது பெயர் தமிழக மக்களுக்கே தெரிய வந்தது. மேலும் இவர் மோகன்பாபுவின் மகன் என்பதும் கூட அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது. இவர் சிம்புவுக்கு மிக நெருங்கிய நண்பர். சொல்லப்போனால் அந்தப்பிரச்சனையில் தலையிட்டு சுமூகமாக முடித்துவைத்தது சிம்புதான். மஞ்சு மனோஜின் நட்புக்காக இந்தப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.