பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது நடித்துவரும் படங்களில் முக்கியமாக பேசப்படுவது ‘ஏக் பெஹ்லி லீலா’.. காரணம் வழக்கமாக துண்டு துக்கடா ரோல்களிலோ அல்லது ஒரு பாட்டுக்கோ தலைகாட்டிவிட்டு செல்லும் சன்னி லியோன் இந்தப்படத்தில் டைட்டில் ரோலான லீலா கேரக்டரில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல, மீரா என்கிற இன்னொரு கேரக்டரிலும் சன்னி நடிக்கிறார். ஆனால் அது இரட்டை வேடமா அல்லது இரண்டு கெட்டப்பா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்..
சன்னி லியோன் நடிக்கிறார் என்றால் ஏதாவது ஸ்பெஷலாக இருக்கும் தானே.. இதிலும் இருக்கிறது. கதைப்படி ராஜஸ்தானில் வசிக்கும் சன்னி லியோனுக்கு அந்த ஊர் பெண்கள் குடம் குடமாக பாலாபிஷேகம் பண்ணுவது போன்ற காட்சியைத்தான் படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக 1௦௦ லிட்டர் பால் வாங்கப்பட்டதாம். அந்த சமயம் கடுங்குளிர் என்பதால் பாலில் வெந்நீர் கலந்து அபிஷேகம் செய்தார்களாம். இந்தபடம் வெளியாகும்போது இந்த காட்சிதான் ஹைலைட்டாக பேசப்படுமாம்.
Comments are closed.